முன் வைப்புகள்

எழுத்துச் சீர்திருத்தம் கோரி முன்வைக்கப்படும் கருத்துக்கள்

247 எழுத்துக்களில் உள்ள 107 குறியீடுகள் 39 ஆகக் குறையும் எனச் சொல்கிறார்கள், ஆனால் இவ்வாறு குறியீடுகளை மாற்றினால் ஏற்கனவே அச்சேற்றிய நூல்கள் பயனற்றுப் போகும். தமிழனின் பழமையான வரலாறுகளை வருங்காலத் தலைமுறை படிக்க இயலாமல் போகும். பழைய கல்வெட்டுகளின் உள்ள தமிழ் எழுத்துக்களைக் கல்வெட்டு ஆய்வாளர்களைக் கொண்டுதான் படிக்க இயலுகிறதே தவிர, எல்லாக்  கல்வெட்டுக்களையும் எல்லோரும் படிக்க இயலாது.

அது போலவே மறு பதிப்பு செய்யப்படாத சங்க இலக்கியத்தை வருங்காலச் சந்ததிகள் கல்வெட்டு எழுத்து அறிஞர்களைக் கொண்டுதான் படிக்க வேண்டியிருக்கும். இவ்வாறு எழுத்து மாற்றம் செய்தால் தமிழினம் தன் தொன்மையை இழந்து இனமும் அந்த மொழி அழியும். மரபு ரீதியான எழுத்துக்களை மாற்றுவதால் எளிதில் தமிழ் பயிற்றுவிக்க உதவும் என ஆதாரப்பூர்வமாக நிருபிக்கப் படவில்லை.

பழைய நூல்களைப் புதுப்பித்தல் என்ன பெரிய விசயம் ஒரு மென்பொருளைக் கொண்டு எல்லா எழுத்தையும் மாற்றிவிடலாம். என விளக்கம் முன் வைக்கிறார்கள். அப்படியானால், நூல்களை மறு பதிப்புச் செய்வதற்கான  பொருளாதாரம்,  கால விரையம் ஆகிவற்றை யார் ஏற்றுக் கொள்வது?

தமிழில் குறியீடுகளைக் குறைத்தால் பிற மொழியினர் தாமே எழுத்துக் கூட்டி தமிழைக் கற்கத் தூண்டும் எனச் சொல்கிறார்கள் ஆனால்,  குறைந்த கல்வி அறிவுடைய பெரும்பாலானவர்கள் கல்வி அறிவற்றவர்களாக மாறிவிடுவர். உள்ளதும் போகும் நிலையில்,   மாயக்கனவு காண்பதில் இவர்கள் சுகம் கொள்கிறார்கள்.

தமிழ் எழுத்துக்களை மாற்றினால் தமிழ் பாலாறும், தேனாறும் ஓடும் என்பது போலத் தேனொழுகப் பேசும் இவர்கள். செய் செக்கம்மா” பையில் உள்ள காசெல்லாம் எடு இல்லாட்டி இரத்த வாந்தி எடுத்து செத்துப் போய்விடுவ” என்று பேசும் மோசடி வித்தைக்காரனைப் போல, தமிழ் எழுத்துக்களை மாத்திடுங்க இல்லாட்டி வெளிநாட்டுத் தமிழர்கள் தமிழ் படிக்கமாட்டாங்க, தமிழ் அழிஞ்சி போயிடும்எனப்  பூச்சாண்டி காட்டி எழுத்துச் சீர்திருத்தம் சரியானது என்று சொல்லி ஏமாற்றி வருகிறார்கள்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக