எழுத்துப் பாதுகாப்பு

தமிழெழுத்தின் சீர்மையை  இந்தியாவில் உள்ள பிற மொழிகளை ஒப்பிட்டு அறிந்து கொள்ள இயலும். இப்போது வழக்கத்திலுள்ள தமிழ் அகர வரிசையைப் பிற மொழிகளோடு ஒப்பிட்டால் தமிழின் சீர்மை விளங்கும்.

வடமொழியில் உயிர் மெய் வரிகள்  :  462, இந்தி மொழியில் உயிர் வரிகள்  : 396, கன்னட உயிர்மெய் வரிகள் : 476, மலையாள உயிர்மெய் வரிகள் : 576 எழுத்துக்கள் உள்ளன.

தமிழ் உயிர்மெய் வரிகள் : 216

இந்திய மொழிகளிலேயே மிகக்குறைவான எழுத்துக்களைக் கொண்டது தமிழ். தமிழ் எழுத்துக்களில் ஒவ்வொரு எழுத்தும் எளிதாய் வேறுபடுத்தி அறியக்கூடிய தனி வடிவத்தில் உள்ளது.

ஏனை மொழிகளைப் போலவே தமிழ் எழுத்துக்களும் மாறி வந்த வரலாறு உண்டு. ஆனால் அக்கால எழுத்துக்கள் கைகளால் எழுதப்பட்ட கையெழுத்துக்களே, அச்சுப் பொறி எழுத்துக்கள் வந்து 300 ஆண்டுகளாக எழுத்து வடிவம் எம்மொழியிலும் ஒரு நிலை பேறு எய்தி விட்டன. என்பதை யாரும் மறுக்க முடியாது.

இவ்வாறு நிலைபெற்ற தமிழ் எழுத்துக்களில் சீர்மை இல்லை எனும் வாதம் ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. பல மெல்லெழுத்துக்களின் முன்பின் வடிவு வேற்றுமைக்கு ஏற்பவும் எளிமைக்கு இணங்கவும், சீர்மைகள் உள்ளன. இறுதிக்கோடுகளுடைய பு, யு, வு, ஙு என்ற இழுப்புக் கோடு பெறுகின்றன. இவை அனைத்தும் கையெழுத்தின் எளிமையையும் இடச்சுருக்கத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

இப்போது எழுத்து சீர்திருத்த ஆதரவாளர்களின் எழுத்துக்களைக் கைகளால் எழுதினால் எழுத்தின் நீளங்கள் கூடுவதோடு கையெழுத்தின் வேகமும் பெருமளவில் குறையும் எனக் கண்டறியப் பட்டுள்ளது,

எழுத்தும் உச்சரிப்பும் தமிழில் ஒன்றாகவே உள்ளது. ஆனால் ஆங்கிலத்தில் எழுத்து வேறு உச்சரிப்பு வேறு என்ற நிலை உள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக