அறிஞர்கள் கூற்று

தமிழறிஞர்கள் எழுத்து மாற்றம் பற்றி சொன்னச் கருத்துக்கள்

எழுத்துச் சீர்திருத்தத்தை எதிர்ப்பவர்கள் “பழமைவாதிகள் என்றால், அந்தப் பட்டத்தை மகிழ்ச்சியோடு ஏற்க நான் தயார், எழுத்துச் சீர்திருத்தவாதிகளுக்கு நானும் ஒரு பட்டம் தரலாம், அது “குழப்பவாதிகள்” என்பதாகும். சிலம்பொலிச் செல்வர்: -மா.பொ.சிவஞானம்

எழுத்துச் சீர்திருத்த விசயத்தில் ஏற்கனவே குறைக்கப்பட்ட எழுத்துக்கள் விசயத்தில் தற்போதைய  அரசு அதைத் தொடர்ந்து கடைபிடிக்கும், ஆனால் மேற்கொண்டு எழுத்துக்களைக் குறைக்கும் சீர்திருத்த்தில் அரசு அவசரப்படாது. கருத்து வேறுபாடுடைய இருதரப்புத் தமிழறிஞர்களையும் கலந்து யோசித்த பிறகே முடிவு செய்ய்யப்படும்.பேராசிரியர் க.அன்பழகன்

எவ்வளவோ மாற்றம் வேண்டியிருக்கலாம். உரோமன் எழுத்திலேயே எழுதி விடலாம். ஆனால், தமிழ் மிகப் பழைய மொழி என்பதனை மறக்க முடியாது. அழிப்பதில் ஏன் இந்த விறுவிறுப்பு? தமிழ் எழுத்துக் கண்ணைக் குத்துகிறதா? கொலை செய்கிறதா? முதலாளிக்குத் துணை போகிறதா நம் எழுத்து? இன்று நம் நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர் நூற்றுக்குப் பத்துப் பதினைந்து பேரே, விரைவான எழுத்து மாற்றமோ உரோமன் எழுத்தோ வந்தால் என்ன ஆகும்? இந்தப் பத்துப் பதினைந்து பேரும் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக மாறிவிடுவர். ஒளியை இருட்டாக்குவதா பெருமை? -மீனாட்சி சுந்தரம் பிள்ளை

தமிழெழுத்துச் சீர்திருத்தம் தேவைதானா? அது தமிழுக்குத்தான் தேவையா? ஏனை இந்திய மொழிகட்கும், ஆங்கிலம் பிரெஞ்சு முதலான மொழிகட்கும் தேவையில்லையா? அவற்றுக்குத் தேவை அவ்வளவும்  இல்லை எனவும்  தமிழுக்குத்தான் உடனடித் தேவை எனவும் சொல்லலாமா? இந்த எழுத்துச் சீர்திருத்தம் இல்லாமையாற்றான் மழலைப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழ் பயிற்று மொழியாக வில்லாயா? இதனைச் செய்துவிட்டால், எல்லாத் துறைகளையும் ஆங்கிலம் போல் சொல்லும் ஆற்றலைத் தமிழ் எய்திவிடுமா? இவை நம் சிந்தனைக்குறிய வினாக்கள். –வ.சுப. மாணிக்கனார்,

தமிழறிஞர்கள் எழுத்துக்கள்  பற்றிச் சொன்ன கருத்துக்கள்

எண் என்ப ஏனை எழுதென்ப இவ்விரண்டும்                                                                          கண் என்ப வாழும் உயிர்க்கு”- திருக்குறள் -392.

எண்ணும் எழுத்தும் கண் ணெனத் தகும்” -கொன்றைவேந்தன், ஒளவையார்

எழுத்து எனப்படுப  அகரம் முதல் னகர இறுவாய், முப்பஃது என்ப        சார்ந்துவரல் மரபின் மூன்று   அலங்கடையே” –  நூல் மரபு, முதல் நூற்பா.

தொல்காப்பியம், எழுத்து அதிகாரம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக